/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 35,556 மகளிர் குழுவிற்கு ரூ.2,619 கோடி கடன் வழங்கல்: எம்.பி., பெருமிதம்
/
மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 35,556 மகளிர் குழுவிற்கு ரூ.2,619 கோடி கடன் வழங்கல்: எம்.பி., பெருமிதம்
மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 35,556 மகளிர் குழுவிற்கு ரூ.2,619 கோடி கடன் வழங்கல்: எம்.பி., பெருமிதம்
மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 35,556 மகளிர் குழுவிற்கு ரூ.2,619 கோடி கடன் வழங்கல்: எம்.பி., பெருமிதம்
ADDED : செப் 10, 2024 06:10 AM
நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில், 3 ஆண்டுகளில், 35,556 மகளிர் சுய உதவி குழுவினருக்கு, 2,169.81 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்-கப்பட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
தமிழகம் முழுதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 2,735 கோடி ரூபாய் வங்கிக் கடன் உதவிகள் வழங்கும் திட்டத்தை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நேற்று மதுரை மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதையடுத்து, 660 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, 65.60 கோடி ரூபாய் மதிப்பில், வங்கி கடன் உதவி வழங்கும் விழா, நாமக்கல்லில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,
மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், மகளிர் குழுவினருக்கு கடன் உதவி வழங்கி பேசி-யதாவது:தமிழகத்தில், மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, இல-வச பஸ் பயணம், மாதம், 1,000 ரூபாய் பெறும் மகளிர் உரிமைத்-தொகை திட்டம், பெண்களுக்கு, 5 பவுன் வரை நகைக்கடன் தள்-ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு
கடன் தள்ளுபடி, அரசுப்பள்ளி மாணவியர் உயர்கல்வி பயில மாதம், 1,000 ரூபாய் உதவித்-தொகை போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில், மூன்று
ஆண்டுகளில், 35,556 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 2,169.81 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கென புதிதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்-கியை உருவாக்கி முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். வரும், டிச., மாதத்திற்குள் அந்த வங்கி செயல்பாட்டிற்கு வரும். அப்போது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான அனைத்து கடன் உதவிகளும் தாராளமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி உள்பட பலர் பங்கேற்றனர்.