நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹோலி' கொண்டாட்டம்
நாமக்கல்:நாமக்கல்லில், கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், ஆர்.பி., புதுார், ராம்தேவ் கோவில் உள்ளிட்ட பகு திகளில், வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஹோலி பண்டிகையையொட்டி, நாமக்கல் ஆர்.பி.புதுார், குட்டமேளத்தெருவில் உள்ள பாபா ராம்தேவ் கோவில் பகுதியில், திரண்டனர். பாரம்பரிய உடை அணிந்தும், இசைக்கருவிகள் இசைத் தும் உற்சாகமாக நடன மாடினர். அதுமட்டுமின்றி, சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி, வண்ணப்பொடிகளை துாவியும், முகத்தில் பூசிக்கொண்டும் தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், வடமாநில பெண்கள் பாரம்பரிய பாடல்களை பாடியும், கும்மியடித்தும், தாண்டியா நடனமாடியும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேபோல், வடமாநிலத்தவர்கள் பணியாற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழிற்சாலைகளிலும் கொண்டாடப்பட்டது.