/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிகுலுக்கல் மூலம் அறை கண்காணிப்பாளர் தேர்வு

ADDED : பிப் 26, 2025 01:22 AM
பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிகுலுக்கல் மூலம் அறை கண்காணிப்பாளர் தேர்வு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள், நேற்று குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 3ல் தொடங்கி, ஏப்., 15 வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, 86 மையங்களில், 9,157 மாணவர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம், 18,461 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வு, 86 மையங்களில் நடக்கிறது. அதில், 9,372 மாணவர்கள், 9,594 மாணவியர் என மொத்தம், 18,966 பேர் பங்கேற்கின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு, 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள், 24, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மூன்று மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், 1,260 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மையங்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மையத்துக்கு ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம், 86 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணியில் ஈடுபடும் அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் பணியாற்றும் அதே ஒன்றியத்துக்குள், வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு இந்த குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.