/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் நகராட்சியில்2 நாள் குடிநீர் வினியோகம் ரத்து
/
பள்ளிப்பாளையம் நகராட்சியில்2 நாள் குடிநீர் வினியோகம் ரத்து
பள்ளிப்பாளையம் நகராட்சியில்2 நாள் குடிநீர் வினியோகம் ரத்து
பள்ளிப்பாளையம் நகராட்சியில்2 நாள் குடிநீர் வினியோகம் ரத்து
ADDED : மார் 08, 2025 01:29 AM
பள்ளிப்பாளையம் நகராட்சியில்2 நாள் குடிநீர் வினியோகம் ரத்து
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை நீர்தேக்க பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, சமயசங்கிலி தடுப்பணை பராமரிப்பு பணிகள் நடப்பதால், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப் படுகிறது என, நகராட்சி கமிஷனர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமயசங்கலி ஆற்று தடுப்பணையில் ஆண்டு பராமரிப்பு பணி நடப்பதால், ஆற்றின் நீர் மட்டம் முழுவதும் குறைந்து வருகிறது. அதனால், இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.