தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்குரூ.856 கோடி கடன் வழங்கல்: எம்.பி.,

மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்குரூ.856 கோடி கடன் வழங்கல்: எம்.பி.,

மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்குரூ.856 கோடி கடன் வழங்கல்: எம்.பி.,


ADDED : ஏப் 06, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு



மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்குரூ.856 கோடி கடன் வழங்கல்: எம்.பி.,

நாமக்கல்:''நாமக்கல் மாவட்டத்தில், 2024ல், மகளிர் குழுவினருக்கு, 856 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில், விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு வரவேற்றார். எம்.பி., மாதேஸ்வரன், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.,யும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதியில், 15 வட்டாரங்களிலும், 8,512, நகர்ப்புற பகுதியில், 3,758 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 1,05,621 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினருக்கு, 2024ல், 856 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, மாவட்டத்தில், 103 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தங்களது உற்பத்தி பொருட்களை மொத்த விற்பனைக்கு தயார் என வருகை புரிந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்ட வணிகர் சங்க, தொழிற்கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, விற்பனையாளர்கள் மற்றும் நேரடி கொள்முதல் செய்வோர், மகளிர் குழுவினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us