sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.9.35 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள்அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைப்பு

/

ரூ.9.35 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள்அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைப்பு

ரூ.9.35 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள்அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைப்பு

ரூ.9.35 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள்அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைப்பு


ADDED : பிப் 15, 2025 01:57 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.9.35 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள்அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைப்பு

ராசிபுரம்:ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பல்வேறு இடங்களில், 9.35 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்டப்பணிகளை, அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தார்.

ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்து, மதியம்பட்டி, ஓ.சவுதாபுரம், நடுப்பட்டி, அலவாய்பட்டி, ஆனந்த கவுண்டம்பாளையம், நெ.3 கொமராபாளையம், கார்கூடல்பட்டி, ஆயில்பட்டி, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, மத்துரூட்டு, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். கலெக்டர் உமா தலைமை வகித்தார். இதில், பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்தில், 14 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். 8.57 லட்சம் ரூபாயில், கார்கூடல்பட்டி ஊராட்சி, மெட்டாலா புதுமில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 200 கிலோவாட் திறன்கொண்ட மின்மாற்றி, ஆயில்பட்டியில், 14.31 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், மங்களபுரத்தில், 15.5 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, திம்மநாயக்கன்பட்டியில், 16.55 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், 4.29 லட்சம் ரூபாயில், மத்துரூட்டு ஊராட்சி, கணவாய்மேடு நாகப்பட்டினம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள, 40 கிலோவாட் திறன்கொண்ட மின்மாற்றி, 3.20 லட்சம் ரூபாயில் கணவாய்மேடு இறக்கம் அருகே, 40 கிலோவாட் திறன்கொண்ட மின்மாற்றி உள்பட, 12 முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

'அட்மா' குழுத்தலைவர்கள் ஜெகநாதன், துரைசாமி, ராமசுவாமி, ஊராட்சி உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், செயற்பொறியாளர் சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us