/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரியில் பாயும் வெள்ள நீர் கடலில் கலந்து வீண்? கதவணை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
/
காவிரியில் பாயும் வெள்ள நீர் கடலில் கலந்து வீண்? கதவணை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
காவிரியில் பாயும் வெள்ள நீர் கடலில் கலந்து வீண்? கதவணை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
காவிரியில் பாயும் வெள்ள நீர் கடலில் கலந்து வீண்? கதவணை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 10, 2024 06:53 AM
நாமக்கல்: 'காவிரியில் பாயும் வெள்ளநீர், கடலுக்கு சென்று கலப்பதை தடுக்கும் வகையில், ஏரி, குளம், குட்டைகளில் சேமிக்கவும், கிடப்பில் போடப்பட்ட தடுப்பணை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், பருவமழை பொய்த்ததால், ஏரி, குளம், குட்டை வறண்டு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், குடிநீர் தேவைக்காக, 2,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்-டது. இருந்தும், அவை போதுமானதாக இல்லை. இந்நிலையில், கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்ததால், அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்-பட்டது. 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டி-யது. இதையடுத்து, அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே வெளி-யேற்றப்பட்டது.
அதன்படி, 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளி-யேறியது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட தண்ணீர், எங்கும் தேக்கி வைக்க வழியின்றி, நேரடியாக கடலில் சென்று கலந்து வீணானது. இதேபோல், கடந்த, 2022 ஜூலையில், வெளியேற்-றப்பட்ட, இரண்டு லட்சம் கனஅடி தண்ணீரும், வெள்ளம்போல் பெருக்கெடுத்து, கடலில் கலந்து வீணானது குறிப்பிடத்தக்கது.
இதனை தடுக்க, நாமக்கல் மாவட்டம், ஒருவந்துாருக்கும், கரூர் மாவட்டம், நெரூருக்கும் இடையே காவிரி ஆற்றில் கதவணை அமைப்பதற்காக, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், ஆய்வுப்பணிக்-காக, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைய-டுத்து பொறுப்பேற்று புதிய அரசு, இத்திட்டத்தை மாற்றி, நாமக்கல் மாவட்டம், மோகனுார், கரூர் மாவட்டம், நெரூருக்கு இடையே புதிதாக ஆய்வு செய்து, 825 கோடி ரூபாயில் புதிய தடுப்பணை கட்டப்படும் என, தெரிவித்தனர்.
அதன்பின், இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டு இறுதியாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர், போதுமான நிதியில்லாததால், மத்திய அரசிடமும், உலக வங்கியிடமும் நிதி கோரி உள்ளதாகவும், நிதி வந்தபின் இத்திட்டம் செயல்படுத்தப்-படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் இத்திட்டம் செயல்படுத்தப்ப-டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
ஆண்டுதோறும் பருவமழை காலத்தில், காவிரி ஆற்றில் வெளி-யேற்றப்படும் உபரிநீர், தேக்கி வைக்க வழியின்றி, கடலில் கலந்து வீணாகி வருகிறது. அதனால், உபரி நீரை சேமித்து வைக்க எவ்வித திட்டமும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. கதவணை திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். அந்த திட்-டத்தை நிறைவேற்றி இருந்தால், தற்போது, பெருமளவில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கலாம்.
அதனால், உபரி நீர் வீணாக சென்று கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், கைவிடப்பட்ட ஒருவந்துார் - நெரூர் கதவணை திட்-டத்தை உடனடியாக செல்படுத்த, தமிழக முதல்வர், பொதுப்-பணி நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும், காவிரி ஆற்றில் இருந்து குழாய் பதித்து, காவிரியில் வரும் உபரி நீரை குளம், ஏரிகளில் நிரப்புவதற்கு புதிய திட்டம் தயார் செய்து, நீர்வளத்துறையினர் மூலம் அரசிற்கு அனுப்பி வைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

