/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு நான்கு விருது
/
முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு நான்கு விருது
முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு நான்கு விருது
முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு நான்கு விருது
ADDED : ஆக 23, 2024 02:11 AM
ராசிபுரம், ஆக. 23-
ஐசிடி அகாடமி 57வது, பிரிட்ஜ்-2024 மாநாடு சமீபத்தில் கோவையில் நடந்தது. ஐசிடி அகாடமி என்பது மாநில அரசுகள் மற்றும் தொழில் நிறுவனங்களை இணைக்கும் நிறுவனமாகும். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு, 2024ம் ஆண்டின் ஈடுபாடு கொண்ட நிறுவனம் என்ற விருதை வழங்கி கவுரவித்தது. மேலும் லெர்ன்த்தான் 2023, சிந்தனை லீடர்ஸ் டாக் தொடர் பங்கேற்பு, பினிஷிங் ஸ்கூல் ஆப் ஐசிடி அகாடமியுடன் தொடர்புடைய கல்லுாரியின் கல்வி வேலைவாய்ப்பு ஆகிய நான்கு விருதுகளை முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு எல்க்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் கண்ணன் ஐ.எ.எஸ்., தமிழ்நாடு ஐசிடி அகாடமி முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும் அழகிரி, உதவி பொதுமேலாளர், ஐசிடி அகாடமி சென்னை ஆகியோர் முன்னிலையில், முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரியின் சார்பில் முதல்வர் முனைவர் வேணுகோபால் விருது பெற்றுக் கொண்டார்.
ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் தாளாளர் கந்தசாமி, செயலாளர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி, பேராசிரியர் குணசேகரன், இணை செயலாளர் பொறியாளர் ராகுல் ஆகியோர், சிறப்பு விருதுகளை பெற உறுதுணையாக இருந்த முதல்வர் பேராசிரியர் மாதேஸ்வரன், ஐசிடி அகாடமி கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயராகவன், துறை
தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.