நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: பாரதம் இளைஞர் நற்பணி சங்கம் மற்றும் சேலம் சித்தி விநாயகர் ரத்த வங்கி சார்பில், ரத்ததான முகாம், ராசிபுரத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் டாக்டர் தனபால், நகராட்சி துணைத்தலைவர் ரங்கசாமி, தே.மு.தி.க., நகரச் செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., சம்பத்குமார் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என, 105 பேர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில், கேப்டன் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் தர்மராஜ், வக்கீல் அன்பழகன், பேராசிரியர் சிவக்குமார், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.