ADDED : ஜூலை 20, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்;சேந்தமங்கலம் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டி பஞ்., பேரமாவூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ஆடி
முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நேற்று காலை மேளதாளம் முழங்க
பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம்
செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமாக வேப்பிலை மற்றும் வளையல்
அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
