/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோமேஸ்வரர் கோவிலில்5ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
/
சோமேஸ்வரர் கோவிலில்5ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED : மார் 19, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமேஸ்வரர் கோவிலில்5ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, காலை சிறப்பு யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து, சோமேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை, பஞ்சமூர்த்திகள், சோமேஸ்வரர் தேர் வரும் விதியில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.