/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் புகுந்த 10 அடி பாம்பால் பரபரப்பு
/
மாரியம்மன் கோவிலில் புகுந்த 10 அடி பாம்பால் பரபரப்பு
மாரியம்மன் கோவிலில் புகுந்த 10 அடி பாம்பால் பரபரப்பு
மாரியம்மன் கோவிலில் புகுந்த 10 அடி பாம்பால் பரபரப்பு
ADDED : ஆக 30, 2024 04:54 AM
ராசிபுரம்: ராசிபுரம், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் புகுந்த, 10 அடி நீள பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரத்தில், நாமக்கல் சாலையில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. வடக்கு நுழைவு வாயில் அருகேயுள்ள, வடிகால் பகுதியில் பாம்பு ஒன்று சென்றதை பக்தர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து பூசாரிகளிடம் தெரிவித்தனர். பாம்பை கண்டுபிடிக்க முடியாததால், ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் தேடி பாம்பை கண்டுபிடித்தனர். 10 அடி நீளம் இருந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். இதை பார்த்த பக்தர்கள் பீதியில் ஓடினர். பாம்பை தீயணைப்பு துறையினர் காப்புக்காட்டில் விட்டனர்.