/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஸ்டேஷனரி கடையில் தீ ரூ.1 கோடி பொருள் நாசம்
/
ஸ்டேஷனரி கடையில் தீ ரூ.1 கோடி பொருள் நாசம்
ADDED : ஆக 25, 2024 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 50; ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை மூடி சென்றார். நள்ளிரவு, 12:00 மணிக்கு கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம், நாமக்கல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. பரமத்தி வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.