/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துருப்பிடித்து உடைந்த மின்கம்பம் விபத்துக்கு முன் மாற்ற கோரிக்கை
/
துருப்பிடித்து உடைந்த மின்கம்பம் விபத்துக்கு முன் மாற்ற கோரிக்கை
துருப்பிடித்து உடைந்த மின்கம்பம் விபத்துக்கு முன் மாற்ற கோரிக்கை
துருப்பிடித்து உடைந்த மின்கம்பம் விபத்துக்கு முன் மாற்ற கோரிக்கை
ADDED : மே 30, 2024 01:19 AM
நாமக்கல், நாமக்கல் பூங்கா சாலையில், அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சி, அனைத்து அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பல்வேறு அமைப்பினரின் போராட்டம் உள்ளிட்டவை தொடர்ந்து நடக்கும். அம்மா உணவகம், மாலை நேரத்தில் காய்கறி விற்பனை, ேஷர் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் இரவு நேரத்தில் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லப்படும். அதனால் இந்த சாலை எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படும்.
இந்நிலையில், அங்கிருந்த மின்விளக்கு கம்பம் ஒன்று அதன் அடிப்பாகம் துருப்பிடித்ததால் உடைந்து, மரக்கிளையின் உதவியுடன் தாங்கியபடி நின்றுகொண்டிருக்கிறது. அப்படியிருந்தும், இரவு நேரத்தில் மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. மின் ஒயர்கள் அறுந்து மக்களுக்கு ஆபத்து நேரும் முன், கம்பத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.