/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பலபட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
/
பலபட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பலபட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பலபட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED : செப் 16, 2024 02:49 AM
நாமக்கல்: நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
நாமக்கல் மெயின் ரோட்டில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 13ல், மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வருதல், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.மேலும், கோபுர கலசம் வைத்தல், அம்மன் பிரதிஷ்டை செய்தல், இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடந்தன. நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, 4ம் கால யாகசாலை பூஜை துவங்கி, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.
அதையடுத்து, அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, முதலில் கோவில் கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து, விநாயகர் மற்றும் மாரியம்மன் மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்தது. மகா அபிஷேகம், சுவாமி தரிசனம், தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மெயின் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டது. நாமக்கல் கூடுதல் எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர், திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

