/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையால் செங்கல் தயாரிப்பு பணி பாதிப்பு
/
மழையால் செங்கல் தயாரிப்பு பணி பாதிப்பு
ADDED : மே 27, 2024 06:03 AM
எருமப்பட்டி : எருமப்பட்டி, சேந்தமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு, தினமும் பல லட்சம் செங்கற்கள் தயார் செய்யப்பட்டு, ஈரோடு, கரூர், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணியை திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 3 மாதமாக நல்ல வெயிலால் தினமும் பல லட்சம் செங்கற்கள் தயார் செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த, ஒரு வாரமாக பெய்யும் மழையால் செங்கல் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதுடன், முதல் நாள் பெய்த மழையில் ஏராளமான செங்கற்கள் மழையில் நனைந்து வீணாகின.

