/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தமிழில் பெயர் பலகை அமைக்க வணிகர்களுக்கு அவகாசம் வழங்கணும்'
/
'தமிழில் பெயர் பலகை அமைக்க வணிகர்களுக்கு அவகாசம் வழங்கணும்'
'தமிழில் பெயர் பலகை அமைக்க வணிகர்களுக்கு அவகாசம் வழங்கணும்'
'தமிழில் பெயர் பலகை அமைக்க வணிகர்களுக்கு அவகாசம் வழங்கணும்'
ADDED : ஜூலை 20, 2024 02:44 AM
நாமக்கல்,:'தமிழில் பெயர் பலகை அமைக்க, தமிழக அரசு வணிகர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் பேசினார்.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள் திருத்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்தது.
தொழிலாளர் ஆய்வாளர் சங்கர் தலைமை வகித்து, சட்ட திருத்தங்கள், வணிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினார்.நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து பேசுகையில், ''புதிய சட்ட திருத்தப்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்கள், இணையதளத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வணிக நிறுவனங்களும், தங்களது பெயர் பலகையை தமிழில் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமைக்காத வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பேசுகையில், ''தமிழில் பெயர் பலகை அமைக்க தமிழக அரசு வணிகர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். புதிய சட்ட திருத்தங்கள் பற்றி அனைத்து வணிகர்களுக்கும் சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.பேரமைப்பு நிர்வாகிகள், நாமக்கல் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வணிகர்கள், நிறுவன மேலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.