/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராகவேந்திரா மட பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்
/
ராகவேந்திரா மட பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்
ராகவேந்திரா மட பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்
ராகவேந்திரா மட பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்
ADDED : ஜூலை 02, 2024 07:54 AM
நாமக்கல்: மந்த்ராலயம் ராகவேந்திரா மட பீடாதிபதி சுபு-தேந்திர தீர்த்த ஸ்வாமிகள், நேற்று நாமக்கல் நர-சிம்மர், நாமகிரி தாயார் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
ஈரோட்டில் நடந்த கும்பாபிஷேக விழாவில், நேற்று மந்த்ராலயம் ராகவேந்திரா மட பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமிகள் பங்கேற்றார். அதை தொடர்ந்து, மாலை, நாமக்கல் நாமகிரி தாயார் கோவிலுக்கு சென்றார். அங்கு, பட்டாச்-சாரியார்கள், அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டார். பக்-தர்கள் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''நம் நாட்-டிற்கும், இந்த தேசத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ராகவேந்திரா சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்,'' என்றார்.
ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் இளையராஜா, ஜோதிடர் ஷெல்வீ உள்பட பலர் உடனிருந்தனர்.