/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்டர் இல்லாததால் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் கலர் வேட்டி உற்பத்தி பாதிப்பு
/
ஆர்டர் இல்லாததால் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் கலர் வேட்டி உற்பத்தி பாதிப்பு
ஆர்டர் இல்லாததால் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் கலர் வேட்டி உற்பத்தி பாதிப்பு
ஆர்டர் இல்லாததால் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் கலர் வேட்டி உற்பத்தி பாதிப்பு
ADDED : ஜூலை 05, 2024 01:39 AM
பள்ளிப்பாளையம்:கலர் வேட்டிகளுக்கு போதிய ஆர்டர் இல்லாததால், பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பல ஆண்டுகளாக லுங்கி, சர்ட், துண்டு உள்ளிட்டவை விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக காவி, கருப்பு, பச்சை, நீலம், ஆரஞ்சு, மஞ்சள் உள்ளிட்ட கலர் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கலர் வேட்டிகளுக்கு ஆர்டர் குறைந்துள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் ராஜ்குமார் கூறியதாவது;
விசைத்தறியில் கருப்பு, காவி உள்பட பல்வேறு கலர்களில் வேட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. அவை ஈரோடு ஜவுளி மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து மொத்த வியாபாரிகள் மூலம் தமிழகம், கேளரா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தீபாவளி, பொங்கல், சபரிமலை சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் கலர் வேட்டிகளுக்கு ஆர்டர் கிடைக்கும். குறிப்பாக ஐயப்ப சீசன் காலத்தில், விற்பனை அதிகரித்து காணப்படும்.
கடந்த ஓரு மாதமாக, கலர் வேட்டி விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய ஆர்டர் கிடைக்காமல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் துவங்கியதும், 30 சதவீதம் ஆர்டர் வரும் என எதிர்பார்க்கிறாம். ஆடி மாதம் முடிந்தவுடன் தீபாவளி ஆர்டர் வந்து விடும். அப்போது வழக்கமான உற்பத்தி நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.