/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலியாக உள்ள நகர்ப்புற சமுதாய அமைப்பாளர் பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
/
காலியாக உள்ள நகர்ப்புற சமுதாய அமைப்பாளர் பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
காலியாக உள்ள நகர்ப்புற சமுதாய அமைப்பாளர் பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
காலியாக உள்ள நகர்ப்புற சமுதாய அமைப்பாளர் பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
ADDED : ஆக 27, 2024 03:22 AM
நாமக்கல்,: 'நகர்ப்புற பகுதியில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணிக்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படும், நகர்ப்புற பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் பணியிடங்களுக்கு, திருச்செங்கோடு நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம், வெளிச்சந்தை அடிப்படையில், தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்துவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர், கடந்த, 5ல், 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். கணினி துறையில் (எம்.எஸ்., ஆபீஸ்) பிரிவில் திறன் பெற்றவராகவும், நல்லபேச்சுத்திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில், களஅளவில் குறைந்தது ஓராண்டு பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். கட்டாயமாக கணினி இயக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், பகுதி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினராகவும், சம்பந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து பரிந்துரை கடிதம், தீர்மானம் நகல் பெற்று வழங்க வேண்டும்.
இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். தகுதிஉள்ள விண்ணப்பதாரர்கள், வரும், 30 மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 'செயலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், சமுதாயகூட கட்டடம், பழைய பஸ் ஸ்டாண்ட், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்--637211' என்ற முகவரிக்கு சுயவிபரம் மற்றும் தேவையான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.