/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செயல் அலுவலர் சர்ச்சை பேச்சு: கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
/
செயல் அலுவலர் சர்ச்சை பேச்சு: கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
செயல் அலுவலர் சர்ச்சை பேச்சு: கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
செயல் அலுவலர் சர்ச்சை பேச்சு: கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஆக 31, 2024 01:06 AM
ப.வேலுார்:: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர், கவுன்சிலர்-களை வெளியே போ என கூறியதால், அவர்கள் தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்-டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், செயல் அலுவலராக சோமசுந்தரம் உள்ளனர். டவுன் பஞ்சாயத்து தேர்தலுக்கு பின் மன்ற கூட்டம்,
ஒரு சில முறை மட்டுமே நடந்தது. கவுன்சிலர்கள் உட்கட்சி பூசலால், கூட்டம் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ப.வேலுார் டவுன் பஞ்., மூன்று பெண் கவுன்சி-லர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள குறைகள் குறித்து, செயல் அலுவலரை சந்திக்க நேற்று முன்தினம் அலுவலகம் சென்ற-போது, நேரில் வந்து சந்திக்க வேண்டாம்.
இங்கு வர தேவை-யில்லை, வெளியே போங்கள் மொபைல்போனில் பேசிக் கொள்-ளலாம் என்று பதில் அளித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பெண் கவுன்சிலர்கள் உள்பட எட்டு கவுன்சிலர்கள், நேற்று டவுன் பஞ்சாயத்து
அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இது குறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது: குறைகளை நிவர்த்தி செய்ய, மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் டவுன் பஞ்., செயல் அலுவலர் சோமசுந்தரத்தை சந்திக்க சென்றால், அநாகரீகமாக பேசுகிறார். டவுன் பஞ்., தலைவர்
லட்சுமி, அவரது கணவர் முர-ளியிடம் பேசுகிறார். ப.வேலுார் முழுக்க ஒரு மாதமாக கொசு மருந்து அடிக்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர். டவுன் பஞ்.,ல் குப்பை வண்டி ஓட்டுவதற்கு மூன்று டிரைவர்கள் உள்-ளனர்.
ஆனால், துாய்மை பணியாளர்களை கொண்டு டிராக்டர் மினி லாரி இயக்கப்படுகிறது. தொடர்ந்து செயல் அலுவலர், கவுன்சிலர்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டால், பொதுமக்களுடன் சேர்ந்து டவுன் பஞ்.,
அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினர்.
இது குறித்து செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில்,''நியாய-மான முறையில், கவுன்சிலர்கள் என்னை போனில் தொடர்பு கொள்ளலாம். தலைவர், கவுன்சிலர்கள் உள்ள வாட்ஸ் ஆப் குழுவை நான் ஏற்படுத்தியுள்ளேன்.
அதில் கவுன்சிலர்கள் புகார் குறித்து தெரிவிக்கலாம். கவுன்சிலர்கள் நேரடியாக வந்தால் அலு-வலக வேலை தாமதமாகிறது. ப.வேலுார் கவுன்சிலர்கள் சரிவர இயங்குவதில்லை. அதனால் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளேன்.
கவுன்சிலர்கள் மனுக்களை அளித்து விட்டு செல்-லலாம். விவாதம் என்பது மன்ற கூட்டத்தில் வைத்துக் கொள்-ளலாம். டவுன் பஞ்சாயத்தில் எந்த விதிமுறையும் மீறப்பட-வில்லை. குறைகள் இருந்தால் பொதுமக்கள் என்னை
நேரடியாக தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.