/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

ADDED : ஏப் 23, 2024 04:27 AM
பள்ளிப்பாளையம்: சுட்டெரிக்கும் வெயிலால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிப்
பாளையம் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்தாண்டு வெயில் தாக்கம், வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில், காலை, 11:00 முதல், 5:00 மணி வரை அனல் காற்று வீசுகிறது. அதிக வெப்பம் காரணமாக பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதற்கு ஏற்ப நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக கீழே செல்கிறது.
இதுகுறித்து, மோளகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறியதாவது: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடைகளுக்கு தீவனம், தானியம், காய்கறி, பயறு வகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அதிக வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் குறைவால் சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழை பெய்தால், வெப்பம் குறைந்து நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க வாய்ப்புள்ளது. இதனால், கோடை மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.