/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிப்காட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 8ல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
/
'சிப்காட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 8ல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
'சிப்காட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 8ல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
'சிப்காட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 8ல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜூலை 04, 2024 10:52 AM
நாமக்கல்: 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 8ல் கலெக்டர் அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மோகனுார் தாலுகாவில் உள்ள வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில், 'சிப்காட்' அமைந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கும், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால், திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையொட்டி, 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, 100க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த, 60 நாட்களாக தினமும், இரவில், வளையப்பட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், வளையப்பட்டி பகுதியில் உள்ள விளை நிலங்கள், ஏரி, குளம், நீரோடைகளை மறைத்து, தரிசு நிலம் என தவறான வரைபடத்தை அரசுக்கு அனுப்பி உள்ளனர். அந்த வரைபடத்தை மாற்றி உள்ளதை, உள்ளவாறு வரைபடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை இதுவரை ஏற்காததால், நாமக்கல் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு அளிப்பதற்காக, நேற்று ஏராளமான ஆண்களும், பெண்களும் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் இல்லாததால், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, 'ஏற்கனவே குறிப்பிட்டபடி, 'சிப்காட்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும், 8 காலை, 10:00 மணி முதல், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என, தெரிவித்தனர்.