/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிதி நிறுவன மேலாளர் அடித்து கொலை
/
நிதி நிறுவன மேலாளர் அடித்து கொலை
ADDED : செப் 18, 2024 01:21 AM

ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மனோஜ், 32, தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர். சூரியம்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகள் பிரியா, 28, இளநிலை உதவியாளர்.
இவர்கள் இருவருக்கும், மூன்றாண்டுகளுக்கு முன் திருமணமானது. ஆதியுகன், 2, என்ற மகன் உள்ளார். மனோஜ் கோவையில் தங்கி, அங்குள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். மனைவி பிரியா, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார்.
இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 14ம் தேதி அன்று விடுமுறையில், சொந்த ஊரான ப.வேலுாருக்கு மனோஜ், பிரியா வந்தனர். நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட பிரியா, பெற்றோர் வீட்டிற்குச் செல்ல தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஒரு லேத் பட்டறை முன் நின்று கொண்டிருந்தார்.
அங்கு வந்த மனோஜ், அவரது தாய் மணிமேகலை மற்றும் சிலர், பிரியாவிடம் சமாதானம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிரியாவின் தந்தை பொன்னுசாமி, அண்ணன் சுந்தர்ராஜன், 33, உறவினர் சக்திவேல், 49, ஆகியோர், இரும்பு ராடால் மனோஜை சரமாரியாக தாக்கினர்.
படுகாயமடைந்த மனோஜை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், மனோஜ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
போலீசார், சுந்தர்ராஜன், சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவான பொன்னுசாமியை தேடி வருகின்றனர்.