/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாட்டுச்சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்
/
மாட்டுச்சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்
ADDED : மார் 05, 2025 06:20 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுகிறது.
அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், வேலகவுண்டம்பட்டி, திருமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் வருகை அதிகளவில் இருந்தது. மாடுகளுடன் சேர்த்து கன்றுக்குட்டி ஜோடிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. நேற்று நடந்த சந்தையில், 2.70 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இதுகுறித்து, மாட்டு வியாபாரிகள் கூறுகை யில், 'கேரளாவில் கன்று குட்டிகளுடன் மாடு வைத்திருப்பவர்களுக்கு, அரசு, 'லோன்' வழங்குகிறது. இதனால், நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடுகளுடன் சேர்த்து கன்று குட்டிகளை, அதிகளவில் கேரளா வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால், மாடுகள் விலையும் உயர்ந்தது' என்றார்.