/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய லோக் அதாலத்: 1,049 வழக்கில் ரூ.16.70 கோடிக்கு தீர்வு
/
தேசிய லோக் அதாலத்: 1,049 வழக்கில் ரூ.16.70 கோடிக்கு தீர்வு
தேசிய லோக் அதாலத்: 1,049 வழக்கில் ரூ.16.70 கோடிக்கு தீர்வு
தேசிய லோக் அதாலத்: 1,049 வழக்கில் ரூ.16.70 கோடிக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 03:00 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்-றத்தில், 1,049 வழக்குகளில், 16 கோடியே, 70 லட்சத்து, 9,141 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்-டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தல்படி, நாமக்கல் மாவட்-டத்தில், நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு, ஒருங்கி-ணைந்த நீதிமன்ற வளாகங்கள், சேந்தமங்கலம், குமாரபா-ளையம் ஆகிய நீதிமன்றங்களிலும், தேசிய அளவிலான (லோக் அதாலத்) மக்கள் நீதிமன்றம், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குருமூர்த்தி தலைமை வகித்து, வழக்கு விசாரணை மேற்கொண்டார்.இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. நீதி-பதிகள் முனுசாமி, தங்கமணி, பிரவீனா, பிரபாசந்திரன், விஜய-குமார், மோகனபிரியா ஆகியோர் விசாரணை செய்தனர். அதேபோல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு, சேந்தமங்-கலம், குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்களிலும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்-வுகள் காணப்பட்டன.
இந்த தேசிய நீதிமன்றங்களில், முன்னதாக, ஏற்கனவே நிலு-வையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமை-யியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்-னைகள் போன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்-பட்டு மிக விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
இங்கு, நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்யக்கூடிய வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கும் சம-ரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றங்கள் மூலம் முடித்துக்-கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. வழக்குக-ளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம், முழுமையாக திருப்-பித்தர வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படுவது சிறப்பம்சம். நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம், 2,239 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்-பட்டன. அதில், 1,049 வழக்குகளில், 16 கோடியே, 70 லட்சத்து, 9,141 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.