/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கனவு இல்லம்' திட்டத்தில் 6,040 பேருக்கு ரூ.211.40 கோடியில் வீடு கட்ட ஆணை: எம்.பி.,
/
'கனவு இல்லம்' திட்டத்தில் 6,040 பேருக்கு ரூ.211.40 கோடியில் வீடு கட்ட ஆணை: எம்.பி.,
'கனவு இல்லம்' திட்டத்தில் 6,040 பேருக்கு ரூ.211.40 கோடியில் வீடு கட்ட ஆணை: எம்.பி.,
'கனவு இல்லம்' திட்டத்தில் 6,040 பேருக்கு ரூ.211.40 கோடியில் வீடு கட்ட ஆணை: எம்.பி.,
ADDED : ஆக 03, 2024 01:38 AM
நாமக்கல், 'மாவட்டத்தில், 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 6,040 பேருக்கு, 211.40 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார், ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனுார், நாமக்கல், புதுச்சத்திரம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில், தமிழக அரசின், 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார், பயனாளிகளுக்கு ஆணை வழங்கி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 'குடிசையில்லா தமிழகம்' என்ற இலக்கை எய்திடும் வகையில், 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தில், தகுதி உள்ள அனைவருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது. 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 3 தவணையாக தொகை வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 6,040 பயனாளிகளுக்கு, 211.40 கோடி ரூபாய் மதிப்பில், வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகட்ட ஆணை பெறும் பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் அதனை முறையாக பயன்படுத்தி கொண்டு வீடு கட்ட வேண்டும்.
மேலும், வெண்ணந்துார், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 850 கோடி ரூபாய் மதிப்பிலும், சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதிகளில் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில், 364 கோடி ரூபாய் மதிப்பிலும், புதிய குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.