/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சந்து காளியம்மன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
/
சந்து காளியம்மன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
சந்து காளியம்மன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
சந்து காளியம்மன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
ADDED : ஜூன் 24, 2024 03:12 AM
ராசிபுரம்;ராசிபுரம், புதுப்பாளையம் சாலை, கிழக்கு தெருவில் சந்து காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கடந்த வாரம், சுற்றுப்பொங்கல் விழா தொடங்கியது. நேற்று, முக்கிய நிகழ்ச்சியாக அலகு குத்தும் விழா, பொங்கல் வைக்கும் விழா நடந்தது. முன்னதாக, பக்தர்கள் சேலம் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து, அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதில், 2க்கும் மேற்பட்ட பெண்கள், 18 அடி நீள வருவான் வடிவேலன் அலகு குத்தி அசத்தினர். பக்தர்கள் காளியம்மன வேடமிட்டு ஆடி வந்தனர். பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். சேலம் பிரதான சாலை, கடைவீதி, பட்டணம் ரோடு வழியாக கோவிலை அடைந்தனர். மாலை பொங்கல் வைக்கும் விழா நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.