/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1 கோடியில் 60 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவமனை பணிகள் துவக்கம்
/
ரூ.1 கோடியில் 60 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவமனை பணிகள் துவக்கம்
ரூ.1 கோடியில் 60 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவமனை பணிகள் துவக்கம்
ரூ.1 கோடியில் 60 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவமனை பணிகள் துவக்கம்
ADDED : ஆக 04, 2024 03:38 AM
நாமக்கல்: நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு இட-மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, 'சித்த மருத்துவமனை, 60 படுக்கை வசதிகளுடன் செயல்படும்' என, மக்கள் நல்வாழ்-வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சட்டசபையில் அறிவித்தார். தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரம-ணியன், ராசிபுரம் தாலுகாவில் நடந்த அரசு விழாவில், சித்த மருத்துவமனைக்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.
மேலும், சித்த மருத்துவமனை சிறப்புடன் செயல்பட கூடுதல் நிதி கேட்டு, தமிழக அரசிற்கு, நாமக்கல் கலெக்டர் உமா மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு சித்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் அல்லது தமிழகத்தில் முதல் முறையாக சித்த மருத்துவத்திற்கென்றே, 60 படுக்கைகள் கொண்ட அரசு சித்த மருத்துவமனை, நாமக்கல் நகராட்சி புதிய நகர்ப்புற ஆரம்ப சுகா-தார நிலையம் (பழைய தலைமை மருத்துவமனை) வளாகத்தில் செயல்பட உள்ளது.
இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், எம்.பி., ராஜேஸ்குமார், புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சித்த மருத்-துவமனை பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.