ADDED : ஆக 01, 2024 02:02 AM
மோகனுார்: மோகனுாரில், குறு வட்ட அளவிலான கபடி போட்டி, அணியா-புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. இதில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என, 19 அணி-யினர் பங்கேற்றனர். அவர்கள், 14, 17, 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் விளையாடினர்.
தலைமையாசிரியர் புனிதா, கபடி போட்டியை துவக்கி வைத்தார். 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில், பாலப்பட்டி அரசு மேல்நி-லைப்பள்ளி, முதலிடம்; எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்-பள்ளி, 2வது இடம்; 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பாலப்-பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முதலிடம்; ஒருவந்துார் புதுார், அரசு உயர்நிலைப்பள்ளி, 2ம் இடம்; 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முதலிடம்; பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 2ம் இடம் பிடித்தன.
இதேபோல், பெண்களுக்கான போட்டியில், 14 வயது பிரிவில், ஓலப்பாளையம், காவேரி வித்யா பவன் மெட்ரிக் பள்ளி, முத-லிடம்; அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2ம் இடம்; 17 வயது பிரிவில், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்-பள்ளி முதலிடம்; ஆண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, 2ம் இடம்; 19 வயது பிரிவில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்-பள்ளி, முதலிடம்; மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்-பள்ளி, 2ம் இடம் பிடித்தனர். இதில் முதலிடம் பிடித்த அணி-யினர், மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட உள்-ளனர்.