/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்
/
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்
அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்
ADDED : ஆக 30, 2024 04:49 AM
பள்ளிப்பாளையம்: ஆவாரங்காடு அரசு பள்ளிக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 65 செட் கொண்ட பென்ச், டெஸ்குகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி வழங்கினார்.
பள்ளிப்பாளையம் அடுத்த, ஆவாரங்காடு பகுதியில் நகராட்சி அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பென்ச், டெஸ்க் வழங்க கோரி பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு சட்டசபை தொகுதி 2023-24ம் ஆண்டின் மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, 65 செட் கொண்ட பென்ச், டெஸ்க்குகளை நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளிப்பாளையம் நகர, அ.தி.மு.க., செயலர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலர் சுப்ரமணி மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

