/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2024 01:44 AM
நாமக்கல்,நாமக்கல்லில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல், மோகனுார் சாலையில் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சரவணக்குமார் வரவேற்றார். தலைமையிட செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாநில பொருளாளர் மலர்கண்ணன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.