/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் அருகே கோவில் கும்பாபிஷேகம்
/
குமாரபாளையம் அருகே கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 29, 2024 02:06 AM
குமாரபாளையம், ஆக. 29-
குமாரபாளையம் அருகே, பச்சாம்
பாளையம் அல்லிநாயக்கன்பாளையத்தில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி, கருப்பணார் சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 19ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், கணபதி யாகம் மற்றும் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அங்காளம்மன், பெரியாண்டிச்சி, கருப்பணார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. 12 நாட்களுக்கு தினமும் மண்டல பூஜை நடக்கிறது.

