/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாட்டு துப்பாக்கி யாருடையது போலீசார் தீவிர விசாரணை
/
நாட்டு துப்பாக்கி யாருடையது போலீசார் தீவிர விசாரணை
நாட்டு துப்பாக்கி யாருடையது போலீசார் தீவிர விசாரணை
நாட்டு துப்பாக்கி யாருடையது போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஆக 30, 2024 04:47 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, தோட்டமுடையாம்பட்டியில் பன்றி வேட்டையாட வைத்திருந்த நாட்டு துப்பாக்கி யாருடையது என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி யூனியன், தோட்டமுடையாம்பட்டி கிராமத்தில் கொல்லிமலையை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, 55, நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தை, பட்டரை வைப்பதற்காக அவரது அண்ணண் அரப்புலியை அழைத்து வர, நேற்று முன்தினம் அதிகாலை சுப்பிரமணி சென்ற போது, பன்றி வேட்டைக்கு வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்து காயமடைந்தார். நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.எருமப்பட்டி இன்ஸ்பெக்டர் (பெ) லட்சுமணதாஸ், காயமடைந்த சுப்பிரமணி, அவரது மனைவி சரசு, அண்ணன் அரப்புலி மற்றும் அவரது இரு மகள்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,'இதுவரை நடந்த விசாரணையில், பன்றிகள் சுடுவதற்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி வெடித்து, காலில் பட்டதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் குடியிருக்கும் விவசாயிகளிடம் நடத்திய விசாரணையில், துப்பாக்கியை யாரும் சொந்தம் கொண்டாட வராததால், துப்பாக்கி யாருடையது என முதலில் கண்டு பிடிக்க தீவிர முயற்சி எடுத்து
வருகிறோம்,' என்றனர்.

