/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குவிந்துள்ள குப்பையால் பொதுமக்கள் அவஸ்தை
/
குவிந்துள்ள குப்பையால் பொதுமக்கள் அவஸ்தை
ADDED : ஏப் 10, 2024 07:28 AM
நாமகிரிப்பேட்டை, : நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்.,க்குட்பட்ட தேவஸ்தானம் புதுார் நாமகிரிப்பேட்டை ஒன்றிய அலுவலகம் அடுத்து தெரு முடிவில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இந்த குப்பை தொட்டியை இரண்டு தெருக்களில் உள்ள, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். குப்பையை டவுன் பஞ்., ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை. கடந்த, 3 மாதமாக குப்பையை சுத்தம் செய்யாததால், குப்பை மலைபோல் குவித்துள்ளது. அதுமட்டுமின்றி காற்றடிக்கும் போது மீண்டும் குப்பைகள் தெரு முழுதும் பரவி விடுகிறது.
அழுகும் குப்பைகளையும் அப்புறப்படுத்தாததால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, இந்த குப்பையை உடனே அள்ள டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

