/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு
/
இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு
ADDED : ஜூன் 09, 2024 04:15 AM
நாமக்கல்: மாவட்டத்தில் இன்று நடக்கும், குரூப்-4 தேர்வுக்கு, கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில், 588 பேர் ஈடுபட உள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 பணிக்கான போட்டித்தேர்வு, இன்று நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், மோகனுார், சேந்தமங்கலம், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, ஏழு தாலுகாவில், 174 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 51,433 தேர்வர்கள் எழுதுகின்றனர். காலை, 9:30 மணிக்கு தொடங்கி மதியம், 12:45 மணி வரை நடக்கிறது. இத்தேர்வு கண்காணிப்பு பணிகளில், 174 தேர்வு மையங்களிலும், ஒரு முதன்மை கண்காணிப்பாளர், 15 பறக்கும் படை, 7 தாலுகா வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். மேலும், 44 நடமாடும் குழுக்கள், 174 ஆய்வு அலுவலர்கள், ஒரு மையத்திற்கு, தலா, ஒரு ஆயுதம் ஏந்திய போலீசார் வீதம், 174 பேர் என, மொத்தம், 588 பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார், நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், போட்டித்தேர்வு நடக்க உள்ள தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.