/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லி 1 கிலோ ரூ.1,200க்கு விற்பனை
/
குண்டுமல்லி 1 கிலோ ரூ.1,200க்கு விற்பனை
ADDED : நவ 19, 2025 01:55 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த பழையபாளையம், முத்துக்காபட்டி பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். கொல்லிமலை அடிவாரம் என்பதால், இங்கு விளையும் பூக்கள் பெரியதாகவும், நறுமணம் மிக்கதாகவும் உள்ளது. இதனால், வெளிமாவட்ட வியாபாரிகள், போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். மேலும், நாமக்கல், சேலம்
பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
தற்போது, கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் மற்றும் முகூர்த்த நாட்கள் அதிகளவில் வருவதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ, 800 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

