/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பீஹார் தொழிலாளி மர்ம சாவு: விசாரணை
/
பீஹார் தொழிலாளி மர்ம சாவு: விசாரணை
ADDED : நவ 19, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, பூலக்காடு பகுதியில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக்குமார், 16, என்ற இளைஞர் தங்கி, கட்டட வேலை செய்துவந்தார். நேற்று முன்தினம், பீஹாருக்கு சென்று வந்த இவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 2:50 மணிக்கு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அபிஷேக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

