/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
20ல் எச்.டி., தரத்துடன் 10,000 செட்டாப் பாக்ஸ் முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்திற்கு தருவிப்பு
/
20ல் எச்.டி., தரத்துடன் 10,000 செட்டாப் பாக்ஸ் முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்திற்கு தருவிப்பு
20ல் எச்.டி., தரத்துடன் 10,000 செட்டாப் பாக்ஸ் முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்திற்கு தருவிப்பு
20ல் எச்.டி., தரத்துடன் 10,000 செட்டாப் பாக்ஸ் முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்திற்கு தருவிப்பு
ADDED : டிச 18, 2024 01:34 AM
நாமக்கல், டிச. 18-
எச்.டி., தரத்துடன் புதிய செட்டாப் பாக்ஸ், வரும், 20ல், முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்திற்கு, 10,000 எண்ணிக்கையில் தருவிக்கப்படுகிறது. இதையடுத்து, 27,000 பழுதடைந்த பழைய செட்டாப் பாக்ஸ்கள், திருப்பி அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தமிழகம் முழுவதும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்களை வழங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தமிழக அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு நவீன உலக தரம் வாய்ந்த, 'எச்.டி' செட்டாப் பாக்ஸ்கள் விரைவில் வழங்கப்படும் என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
உலக தரம் வாய்ந்த, 'எச்.டி.,' செட்டாப் பாக்ஸ்கள் பெற தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், இரண்டு மாதமாக அதற்கான பணியில் ஈடுபட்டு டெண்டர் விடப்பட்டு தற்போது, 'எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மண்டலம் வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது. அங்கிருந்து அனைத்து மாவட்ட தலைநகரில் உள்ள தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவன அலுவலகம் மூலம், தமிழக அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யபட்ட, 500-க்கும் மேற்பட்ட அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, உலக தரம் வாய்ந்த, 'எச்.டி.,' செட்டாப் பாக்ஸ்கள் இந்த வார இறுதிக்குள் நாமக்கல் மாவட்டத்திற்கு தருவிக்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவன அலுவலகத்தில் உள்ள பழைய பழுதடைந்த, 27,000க்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்களை பழுது நீக்க, கோவை மண்டல சார்வீஸ் சென்டருக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திற்கு, முதல் கட்டமாக, 10,000 உலக தரம் வாய்ந்த 'எச்.டி.,' செட்டாப் பாக்ஸ்கள் வரும், 20ல் வருகிறது. புதியதாக வரும் 'எச்.டி.,' செட்டாப் பாக்ஸ்களை பாதுகாப்புடன் வைக்க, நாமக்கல் மாவட்ட கேபிள், 'டிவி' தனி தாசில்தார் ராஜா, மாவட்ட தொழில் நுட்ப அலுவலர் சதீஷ்குமார், உதவி தொழில் நுட்ப அலுவலர் வரதராஜ் ஆகியோர் விரிவான ஏற்பாடு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அரசு கேபிள், 'டிவி' நிறுவன அலுவலகம் அருகில், 4 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட அறை தயார் செய்யப்பட்டுள்ளது. புதியதாக வரும், 'எச்.டி.,' செட்டாப் பாக்ஸ் உடன் அடாப்டர், எச்.டி.எம்.ஏ., கேபிள் மற்றும் ரிமோட் ஆகிய பேக்கேஜூடன் உள்ளது.
தமிழக முதல்வர் புதிய, 'எச்.டி.,' பாக்ஸை அறிமுகம் செய்து துவக்கி வைத்த பின், கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும். இதனால், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள், பொதுமக்கள் புதிய, 'எச்.டி., செட்டாப் பாக்ஸ் எதிர்பார்த்துள்ளனர்.