/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
11ல் விழிப்புணர்வு 'மினி மாரத்தான்' வீரர், வீராங்கனைக்கு அழைப்பு: கலெக்டர்
/
11ல் விழிப்புணர்வு 'மினி மாரத்தான்' வீரர், வீராங்கனைக்கு அழைப்பு: கலெக்டர்
11ல் விழிப்புணர்வு 'மினி மாரத்தான்' வீரர், வீராங்கனைக்கு அழைப்பு: கலெக்டர்
11ல் விழிப்புணர்வு 'மினி மாரத்தான்' வீரர், வீராங்கனைக்கு அழைப்பு: கலெக்டர்
ADDED : ஜன 09, 2024 11:16 AM
நாமக்கல்: 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு, வரும், 11ல், விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி, நாமக்கல்லில் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 2023ம் ஆண்டிற்கான, 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி' தமிழகத்தில், வரும், 19 முதல், 30 வரை, சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடக்கிறது. இப்போட்டிகளில், 36 மாநிலங்களில் இருந்து, 5,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 5 சிறப்பு வாகனங்கள், தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களுக்கும், நேற்று முதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்திற்கு, வரும், 11 காலை, 5:00 மணிக்கு இந்த விழிப்புணர்வு வாகனம் வருகிறது. அன்று காலை, 7:00 மணிக்கு, 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்' விழிப்புணர்வு மினி மாரத்தான் (5 கி.மீ., துாரம்) போட்டி நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.
மினி மாரத்தான் போட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, சி.எம்.எஸ்., கல்லுாரி வரை சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை
வந்தடைகிறது.
அதில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு,
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், கலெக்டர் உமா ஆகியோர் பரிசு வழங்குகின்றனர். வரும், 11ல், நடக்கும் மினி மாரத்தான் போட்டியில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பங்குபெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.