/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
12ல் நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழாமுன்னேற்பாடு பணி மேற்கொள்ள உத்தரவு

ADDED : ஏப் 08, 2025 02:09 AM
12ல் நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழாமுன்னேற்பாடு பணி மேற்கொள்ள உத்தரவு
நாமக்கல்:'வரும், 12ல் நடக்கும் நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
வரும், 12ல், நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சுவாமி திருவீதி உலா வரும்போதும், திருவிழா காலங்களில், பொதுமக்கள், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், திருத்தேர் விழாவின் போது தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஹிந்து சமய அறநிலையத்துறையினர், அனைத்து துறைகளுடன் இணைந்து தேர்த்திருவிழா நல்ல முறையில் நடக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருடன் சேர்ந்து, தேர் செல்லும் பாதையை முன் ஆய்வு செய்ய வேண்டும். தேர் நிறுத்தும் இடங்களையும் முடிவு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
தேர்த்திருவிழா சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், கூடுதல் எஸ்.பி., தனராசு, ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, சுகந்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.