/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
14 பெண்களுக்கு ஆட்டோ, டாக்சி வாங்க நலவாரியம் மூலம் ரூ.14 லட்சம் மானியம்
/
14 பெண்களுக்கு ஆட்டோ, டாக்சி வாங்க நலவாரியம் மூலம் ரூ.14 லட்சம் மானியம்
14 பெண்களுக்கு ஆட்டோ, டாக்சி வாங்க நலவாரியம் மூலம் ரூ.14 லட்சம் மானியம்
14 பெண்களுக்கு ஆட்டோ, டாக்சி வாங்க நலவாரியம் மூலம் ரூ.14 லட்சம் மானியம்
ADDED : நவ 20, 2025 01:53 AM
நாமக்கல், 'நாமக்கல் மாவட்டத்தில், தொழிலாளர் நல வாரியம் மூலம், 14 பெண்கள் ஆட்டோ, டாக்சி வாங்கி சுயதொழில் புரிய, 14 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம், தமிழக கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உட்பட, 20 வாரியங்களில், 93,688 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தமிழக அமைப்புசாரா டிரைவர்கள் மற்றும் ஆட்டோ மெபைல் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற பெண், திருநங்கை டிரைவர்களுக்கு, சொந்தமாக புதிய ஆட்டோ, டாக்சி வாங்க தலா, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 13 பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு, புதிய ஆட்டோ வாங்குவதற்கும், ஒரு பெண் டாக்சி டிரைவருக்கு, டாக்சி வாங்குவதற்கும் என, 14 பெண்களுக்கு, தலா, ஒரு லட்சம் வீதம் மொத்தம், 14 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

