தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மக்களுக்கு இடையூறு 2 பைக்குகள் பறிமுதல்

மக்களுக்கு இடையூறு 2 பைக்குகள் பறிமுதல்

மக்களுக்கு இடையூறு 2 பைக்குகள் பறிமுதல்


ADDED : நவ 14, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:ப.வேலுார், நல்லுார் அருகே தொட்டியம் தோட்டம் செல்லும் சாலையில், இரண்டு பைக்குகளில் வந்த, நான்கு இளைஞர்கள் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக, வாகனங்களை ஓட்டிச்சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக பைக்குகளை ஓட்டிய இளைஞர்களை எச்சரித்துள்ளனர்.

இருந்தும், தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால், நான்கு பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வில்லிபாளையம் அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பன்னீர் மகன் லோகநாதன், 27, சந்திரன் மகன் பிரதி, 23, சக்திவேல் மகன் திலீப்குமார், 21, துரைசாமி மகன் மணிகண்டன், 20, ஆகியோர் என்பது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த நல்லுார் போலீசார், இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us