ADDED : நவ 14, 2026 06:22 AM

அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:ஆந்திராவில்
இருந்து மீன் லோடு ஏற்றிய சரக்கு வேன் ஒன்று, உடுமலை நோக்கி
புறப்பட்டது. டிரைவர் சந்தோஷ்குமார், 30, வேனை ஓட்டினார்.
வெப்படை அடுத்த உப்புபாளையம் பகுதி வழியாக சென்று
கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து,
சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர்
காயமின்றி தப்பினார். சரக்கு வாகனத்தில் இருந்த மீன்கள், சாலையில்
சிதறிக்கிடந்தன. வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
