ADDED : ஆக 30, 2025 12:56 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் பழனி, 46; இவர், நேற்று மகன் அபிஷேக்குடன், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், துாக்கி வீசப்பட்ட இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பழனி இறந்தார். காயமடைந்த அபிஷேக் சிகிச்சை பெற்று வருகிறார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நடனசபாபதி மகன் பரமசிவம், 50; இவரது தம்பி ராமச்சந்திரனுடன், 45; இருவரும் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி அடுத்த ஆண்டிக்குட்டை பகுதிக்கு வரும்போது, எதிரே வந்த கார் மோதியது. இதில், படுகாயமடைந்த இருவருரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ராமச்சந்திரன் இறந்தார். ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.