/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லேத் பட்டறை ஓனர் வீட்டில் 25 பவுன் திருட்டு
/
லேத் பட்டறை ஓனர் வீட்டில் 25 பவுன் திருட்டு
ADDED : நவ 29, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையத்தில், லேத் பட்டறை உரிமையாளர் வீட்டில், 25 பவுன் நகை திருடப்பட்டது.
குமாரபாளையம், பூலக்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 41; லேத் பட்டறை உரிமையாளர். இவர், குடும்பத்துடன் சேலம் சென்றுவிட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது, பூட்டியிருந்த வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு, 25 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

