/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூலிப்பட்டி குடியிருப்பில் தேங்கிய கழிவுநீரால் அவதி
/
கூலிப்பட்டி குடியிருப்பில் தேங்கிய கழிவுநீரால் அவதி
கூலிப்பட்டி குடியிருப்பில் தேங்கிய கழிவுநீரால் அவதி
கூலிப்பட்டி குடியிருப்பில் தேங்கிய கழிவுநீரால் அவதி
ADDED : நவ 29, 2025 01:42 AM
நாமக்கல், நாமக்கல் - துறையூர் சாலையில், ரெட்டிப்பட்டி அடுத்த கூலிப்பட்டியில் தோகைநத்தம் பகுதி அமைந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அங்கு, தற்போது ரிங் ரோடு அமைக்கப்பட்டு, நாமக்கல், துறையூர், சேந்தமங்கலம் சாலை வேட்டாம்பாடி, திருச்சி சாலை வசந்தபுரத்திற்கு வாகன போக்குவரத்து உள்ளது. அந்த ரிங் ரோடு அமைக்கும்போது, தோகைநத்தம் பகுதி இரண்டாக பிரிந்தது.
அதில் சென்ற சாக்கடை கால்வாயில், தடை ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற விழியின்றி ஒரு பக்கம் மட்டும் குளம்போல் தேக்கமடைந்துள்ளது. அதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், அங்கு வீசும் துர்நாற்றத்தால், வாகன ஓட்டிகள் முகம் சுழிக்கும் வகையில் செல்கின்னறனர். எனவே, ரிங் ரோட்டில் குழாய் பதித்து கழிவுநீரை தங்கு தடையின்றி ரெட்டிப்பட்டி குட்டைக்கு செல்லும் வகையில், கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

