/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபைல் கடையில் திருடிய 3 பேர் கைது
/
மொபைல் கடையில் திருடிய 3 பேர் கைது
ADDED : செப் 30, 2025 01:26 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே மொபைல் கடையில், கடந்த ஆக., 21 இரவு, 9 பட்டன் மொபைல்போன், 5 பழைய மொபைல்போன், 9,000 ரூபாய் ரொக்கம் திருடு போனது. ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று ராசிபுரம் போலீசார் ஆண்டகலுார்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த, மூன்று வாலிபர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில், சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த பூபதி மகன் ஹரிஹரன், 22, அமாணி கொண்டலாம்பட்டி, காட்டூர் அழகு நகர் மயில்சாமி மகன் சந்தோஷ், 21, அமாணி கொண்டலாம்பட்டி, பி.நாட்டாமங்கலம் நல்லப்பன் மகன் ராக்கி பாஸ்கர், 26, ஆகியோர் என்பதும், இவர்கள் மூவரும் பாலப்பாளையம் மொபைல் கடையில் திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த மொபைல் போன், திருட்டுக்கு பயன்படுத்திய டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.