/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்
/
30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்
30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்
30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்
ADDED : செப் 19, 2024 07:34 AM
நாமக்கல்: 'வரும், 30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்-பாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் - திருச்சி சாலை, ஆண்டவர் பங்க் அருகே, ரவி பிளாசா கட்டடத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவல-கத்தில், வரும், 30 காலை, 11:00 மணிக்கு, 'அஞ்சல் துறை வாடிக்-கையாளர்கள் குறை தீர்க்கும்
நாள் கூட்டம்' நடக்கிறது. அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள், தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதாவது இருப்பின், 'அஞ்சல் கோட்ட கண்காணிப்-பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்--637001' என்ற முகவரிக்கு, வரும்,
25க்குள் புகார்களை அனுப்பலாம்.அஞ்சல் உறை மீது, 'அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு -சம்பந்தமாக' என, எழுதவேண்டும். குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும்
சுலந்துகொள்ளலாம். புகார் கடி-தத்தில் முழு தகவல்களும் குறிப்பிட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் எண், அலுவலகத்தில் இருந்து அனுப்பப்-பட்டது
மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும்.புகார்கள் சேமிப்பு கணக்கில் அல்லது அஞ்சல் ஆயுள் காப்-பீட்டில் இருந்தால், அதன் கணக்கு எண் பி.எல்., - ஆர்.பி.எல்.ஐ., பாலிசி நெம்பர், முகவரி மற்றும் எந்த அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விபரங்களை
குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.