/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 32 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 32 டன் காய்கறி விற்பனை
ADDED : டிச 16, 2024 03:12 AM
நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 32 டன் காய்-கறி, பழங்கள், 13.83 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்-களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடு-முறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது, கார்த்திகை மாதம் என்பதால், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் மேற்கொள்ளும் பலர் அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். இதனால், நேற்று வழக்-கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்-தது.
மொத்தம், 203 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்-களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 26,880 கிலோ காய்-கறிகள் மற்றும் 5,405 கிலோ பழங்கள், 10 கிலோ பூக்கள் என மொத்தம், 32,295 கிலோ எடையுள்ள விளை
பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை
செய்யப்பட்டன. அவற்றின் மூலம், 13 லட்சத்து, 83,580 ரூபாய்க்கு
விற்பனையானது.